கொலை முயற்சி வழக்கில் கைதானவருக்கு 3 ஆண்டு சிறை.

கொலை முயற்சி வழக்கில் கைதானவருக்கு 3 ஆண்டு சிறை.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் பொட்ட கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் ரவி மகன் ரஞ்சித்(வயது 26). இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி அன்று இரவு துக்க காரியம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக அதே ஊரை சேர்ந்த வைத்திலிங்கம் மகன் இளங்கோவன்(68) என்பவருடைய வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது இளங்கோவனுக்கும், ரஞ்சித்திற்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியது. இதில் ரஞ்சித்தை, இளங்கோவன் திட்டி தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ரஞ்சித் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து அப்போது இருந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து ஜெயங்கொண்டம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி திருமணி, கொலை முயற்சியில் ஈடுபட்ட இளங்கோவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து போலீசார் இளங்கோவனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

தினத்தந்தி
Leave a Reply

%d bloggers like this: