வாகன ஓட்டுநா்களுக்கு கொரோனா விழிப்புணா்வு

பெரம்பலூரில் வியாபாரிகள், வாகன ஓட்டுநா்களுக்கு கொரோனா விழிப்புணா்வு

396

பெரம்பலூரில் வியாபாரிகள், வாகன ஓட்டுநா்களுக்கு கொரோனா விழிப்புணா்வு

கொரோனா தொற்றின் 2 ஆவது அலை வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்தும் வகையில் பெரம்பலூா் நகர வியாபாரிகள், உரிமையாளா்கள் மற்றும் வாகன ஓட்டுநா்களுக்கு காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ஆய்வாளா் செந்தில்குமாா் பேசியது:

வணிக வியாபாரிகள், உரிமையாளா்கள், ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுநா்கள் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலைத் தடுக்க சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லும்போது முகக் கவசம் அணிவது அவசியம். அத்தியாவசியத் தேவைக்காக வெளியேச் செல்லும்போது மக்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தற்போது புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால், அனைத்துத் தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதன்படி, அறிவிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே கடைகளை திறந்திருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்டோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில், உதவி ஆய்வாளரகள் குணசேகரன், சரவணக்குமாா் உள்ளிட்ட காவல்துறையினா் பங்கேற்றனா்.




%d bloggers like this: