பெரம்பலூரில் கொரோனாவுக்கு முதியவர் உயிரிழந்தார்

பெரம்பலூரில் கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

521

பெரம்பலூரில் கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார்.

பலி எண்ணிக்கை உயர்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 67 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 12 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 3 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 14 பேரும் என மொத்தம் 96 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 3,057 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 29 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு பெரம்பலூர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, பெரம்பலூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த 75 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

371 பேருக்கு சிகிச்சை

மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 2,656 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 371 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 222 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், 67 பேர் பெரம்பலூர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாவட்டத்தில் 1,224 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

ஒரே நாளில் 518 பேருக்கு தடுப்பூசி

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 477 பேருக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியும், 41 பேருக்கு கோவேக்சின் கொரோனா தடுப்பூசியும் என மொத்தம் 518 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் இதுவரைக்கும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி 34 ஆயிரத்து 385 பேருக்கும், கோவேக்சின் கொரோனா தடுப்பூசி ஆயிரத்து 830 பேருக்கு என மொத்தம் 36 ஆயிரத்து 215 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 2 ஆயிரத்து 810 கோவிஷீல்டு தடுப்பூசியும், 720 கோவேக்சின் தடுப்பூசியும் கையிருப்பில் உள்ளது.

தினத்தந்தி

Facebook
%d bloggers like this: