பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி

பெரம்பலூர் மாவட்டத்தில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு கொரோனா தடுப்பூசி

391

பெரம்பலூர் மாவட்டத்தில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு கொரோனா தடுப்பூசி

பெரம்பலூர் மாவட்டத்தில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு போடுவதற்காக கோவிஷீல்டு தடுப்பூசி 6,900-ம், கோவேக்சின் தடுப்பூசி 1,200-ம் வந்துள்ளது. இந்தநிலையில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர்களுக்கும் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் இன்று (திங்கட்கிழமை) பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அஸ்வின் ஓட்டல் கூட்டஅரங்கில் காலை 9 மணி முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. தடுப்பூசி போட்டு கொள்ள வருபவர்கள் தங்களுடைய ஆதார் அட்டையும், தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் அடையாள அட்டையும், கல்லூரி மாணவ-மாணவிகள் தங்களுடைய கல்லூரி அடையாள அட்டையும் எடுத்து வர வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேபோல் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், பெரம்பலூர் அருகே உள்ள எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலையிலும், குன்னம் தாலுகாவிலும் 18 வயது முதல் 44 வயது உள்ளவர்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினத்தந்தி

Our Facebook Page
%d bloggers like this: