கொரோனா தடுப்பு விதிமுறை

கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியவர்களிடமிருந்து ரூ.5 ஆயிரம் அபராதம்

395

கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியவர்களிடமிருந்து ரூ.5 ஆயிரம் அபராதம்

வேப்பந்தட்டை தாலுகா பகுதிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதிகளில் தாசில்தார் பாலசுப்பிரமணியன், கொரோனா தடுப்பு விதிமுறைகளை செயல்படுத்துவதற்காக வெங்கலம், பசும்பலூர் மற்றும் வாலிகண்டபுரம் ஆகிய 3 பிர்கா பகுதிகளிலும் ஒவ்வொரு பகுதிக்கும் தலா 2 கண்காணிப்பு குழுவினரை நியமனம் செய்து உத்தரவிட்டார்.

இந்த 6 குழுவினரும் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, சமூக இடைவெளி இல்லாமலும், பொது இடங்களில் முககவசம் அணியாமல் இருந்தவர்களையும் கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதித்தனர். இதில் நேற்று ஒரு நாள் மட்டும் 6 குழுக்களும் இணைந்து ஆய்வு செய்து, கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.5 ஆயிரத்தை அபராதமாக வசூலித்துள்ளனர்.

தினத்தந்தி

Facebook

keywords: கொரோனா தடுப்பு விதிமுறை, COVID-19
%d bloggers like this: