கொரோனா தடுப்பு நெறிமுறை

கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி செய்முறை தேர்வு.

319

கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி செய்முறை தேர்வு.

பிளஸ்-2 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி  செய்முறை தேர்வு நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செய்முறை தேர்வுகள் நடைபெற்றதை ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நிர்மல்ராஜ் ஆய்வு செய்தார். அப்போது பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், குன்னம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, முககவசம் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மேலும் தேர்வு அறை முகப்பில் கைகழுவும் திரவம் வைக்கப்பட்டிருந்தது. ஆசிரியர்கள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு தேர்வு கண்காணிக்கப்பட்டது.

தினத்தந்தி
%d bloggers like this: