Details of private hospitals charging for corona treatment

கொரோனா சிகிச்சை தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம்

286

கொரோனா சிகிச்சை தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம்.

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதித்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை நிர்ணயிக்குமாறு இந்திய மருத்துவக் கவுன்சிலின் தமிழ்நாட்டுப் பிரிவு தமிழக அரசுக்கு பரிந்துரைத்திருந்தது.

மேலும் தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக மக்களும் தொடர்ந்து புகார்களை எழுப்பி வருகின்றனர். இது தொடர்பான செய்திகள் பத்திரிக்கைகளிலும் ஊடகங்களிலும் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடார்ந்து, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனியார் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளிடமிருந்து பெற அனுமதிக்கப்படவேண்டிய தினசரி கட்டணங்கள் மற்றும் நிபந்தனைகள் குறித்து தனது அறிக்கையினை அரசிடம் அளித்தது. இவ்வறிக்கையை கவனமுடன் ஆய்வு செய்த தமிழ்நாடு அரசு, மக்கள் நலன் கருதி கீழ்காணும் கட்டணங்களை நிர்ணயிக்கவும் சில நிபந்தனைகளை விதிக்கவும் உத்தேசித்து அவ்வாறே உத்தரவிடுகிறது.

fees hospital

அறிவிக்கப்பட்டுள்ள இக்கட்டணங்கள் அதிகபட்ச கட்டணமாகும். இக்கட்டணத்திற்கு மேலான தொகையை நோயாளிகளிடமிருந்து வசூலிக்க கூடாது. கரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய மருத்துவ பேரிடர் காலத்தில் அரசு மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் இணைந்து செயல்படும். இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகளின் மூலம் கொரோனா சிகிச்சை முறைகள் மேலும் வலுப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

%d bloggers like this: