கொரோனா கட்டுப்பாட்டு அறை

கொரோனா கட்டுப்பாட்டு அறையை சிறப்பு போலீஸ் அதிகாரி பார்வையிட்டார்.

392

கொரோனா கட்டுப்பாட்டு அறையை சிறப்பு போலீஸ் அதிகாரி பார்வையிட்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பரவி வரும் கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு போலீசார் சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை அமைத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த கட்டுப்பாட்டு அறையை தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு போலீஸ் அதிகாரியும், தமிழக கூடுதல் டி.ஜி.பி.யுமான (தொழில் நுட்ப சேவை) அமரேஷ் பூஜாரி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தற்போது அதிகமாக பரவி வருவதால் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் இருப்பு, பற்றாக்குறைகள் குறித்தும், கொரோனா பணியில் ஈடுபடும் போலீசாருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உடமைகள் குறித்தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபனிடம் கேட்டறிந்து, கொரோனா பரவலை தடுக்க மேலும் பல அறிவுரைகள் கூறினார். இந்த ஆய்வின்போதுமாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஆரோக்கிய பிரகாசம், நீதிராஜ், சுப்பிரமணி, துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், கொரோனா கட்டுப்பாட்டு அறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா, தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசுவரன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினத்தந்தி

Our Facebook Page
%d bloggers like this: