கொரோனாவுக்கு பலி

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி

379

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

140 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 92 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 24 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 9 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 15 பேரும் என மொத்தம் 140 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,225 ஆக உயர்ந்துள்ளது. இதில் 32 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.

3 பேர் சாவு

இந்த நிலையில் கொரோனாவுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டம் பொம்மனப்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவரும், திருச்சி தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு சுகுனேஷ் நகரை சேர்ந்த 62 வயதுடைய ஆண் ஒருவரும், பெரம்பலூர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த எசனை அஞ்சுகம் நகரை சேர்ந்த 54 வயதுடைய ஆண் ஒருவரும் என மொத்தம் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சையில் 1,194 பேர்

மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 2,996 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,194 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 567 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியது உள்ளது.

தினத்தந்தி

Our Facebook Page
%d bloggers like this: