கொரோனா நிவாரண நிதி

ரூ.50 ஆயிரம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய ஆசிரியை.

571

ரூ.50 ஆயிரம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய ஆசிரியை.

கொரோனா நிவாரண நிதிக்கு அரசு பள்ளி ஆசிரியை ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா வைரசின் 2-வது அலையால், கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு உதவி தலைமை ஆசிரியையாகவும், 9, 10-ம் வகுப்புகளுக்கு கணித ஆசிரியையாகவும் பணிபுரியும் பைரவி (வயது 41) நேற்று தனது மகன், மகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் ஆசிரியை பைரவி, கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து, கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினை வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர், பைரவியை பாராட்டினார். ஆசிரியை பைரவி ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது, எளம்பலூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த மாணவ-மாணவிகள் 16 பேருக்கு ஆன்-லைனில் பாடங்கள் கற்பிக்க செல்போன்கள் வாங்கி கொடுத்தார், என்பது குறிப்பிடத்தக்கது.

தினத்தந்தி
%d bloggers like this: