குவைத் மற்றும் ஈரான் நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

குவைத் மற்றும் ஈரான் நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

குவைத்தில் இன்று காலையில் நிலநடுக்கம்  உணரப்பட்டதாக அந்த நாட்டின் அதிகாரப் பூர்வ செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இன்று (திங்கள்கிழமை) காலை 10.02 மணியளவில் குவைத் நகரத்திலிருந்து சல்மியா பகுதிகளில் சில நொடிகளுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருந்ததாக குவைத்தின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  குவைத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் பலர் நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்துள்ளனர். நிலநடுக்கத்தை உணர்ந்த பலர் சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளனர்.

அதே போல் ஈரான் நாட்டின் தென்மேற்கு பகுதியிலுள்ள குசேஸ்தான் மாகாணத்தில் 5.7 ரிக்டர்  அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. ஈரான் நேரப்படி காலை 11.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது.  பூமியின் அடியில் 17 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.7 ஆக பதிவானது.  நிலநடுக்கத்தில் சேதமான விபரங்கள் தெரியவில்லை.
வளைகுடா தமிழன்


Leave a Reply

%d bloggers like this: