குவைத்தில் ஓட்டுநர் உரிமம் இல்லாத வாகன ஓட்டிகள் நாடுகடத்தப்படுவார்கள்.

குவைத்தில் ஓட்டுநர் உரிமம் இல்லாத வாகன ஓட்டிகள் நாடுகடத்தப்படுவார்கள்.


குவைத்தில் இருக்கும் வெளிநாட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் கார் ஓட்டுவது கண்டுபிடிக்கப்பட்டால்  கருணையின்றி  அவர்களின் நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.  இந்த தகவலை உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதாக குவைத் செய்திநிறுவனங்கள் தெரிவிக்கிறது.
சாலை பாதுகாப்பு நாட்டிற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது.  வாகன விபத்துக்கள், இதனால் ஏற்படும் உயிரிழப்புகள் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க இந்த வகையான சட்டங்களை வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்க வேண்டும். ஓட்டுநர் உரிமமில்லாத எந்த நாட்டவராக இருந்தாலும் பாரபட்சமின்றி அவரவர் நாட்டுக்கு அனுப்பப்படும். குறிப்பாக சொல்வதென்றால் நாடுகடத்தப்படும் என்ற வார்த்தைகளையே அந்த அறிவிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
குவைத்தில் பணிபுரியும் நமது சகோதரர்கள், அருகில்தான் செல்கிறோம் யாரும் நம்மை பிடிக்க மாட்டார்கள் என்று நினைத்து ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டாதீர்கள். அது உங்களுக்கும் உங்கள் வேலைக்கும் ஆபத்தாக முடியலாம். இதை மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.
வளைகுடா தமிழன்

Leave a Reply

%d bloggers like this: