DKP10071901

குவாரி பலி எதிரொலி திருச்சி மாநகர வெடிகுண்டு கண்டுபிடிப்பு செயலிழப்பு பிரிவு போலீசார் ஆய்வு.

7

குவாரி பலி எதிரொலி திருச்சி மாநகர வெடிகுண்டு கண்டுபிடிப்பு செயலிழப்பு பிரிவு போலீசார் ஆய்வு.

பெரம்பலூர் அருகே செங்குணம் கல்குவாரியில் பாறைகளைத் தகர்க்க வெடிவைத்தபோது எதிர்பாராமல் தோட்டாவெடித்து தொழிலாளி பலி யான சம்பவம் எதிரொலியால் திருச்சி மாநகர வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவு போலீசார் நேரில்ஆய்வு செய்தனர்.பதிக்கா மல் குவாரியில் கிடந்த 50டெட்டனேட்டர்கள், 13ஜெலட்டின் குச்சிகள், பேட்டரி பாக்ஸ் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்துத்துறை அலுவலகம்அருகே, செங்குணம் ஊராட்சி எல்லையிலுள்ள மலைக்குன்றில் பல கல்குவாரிகள் உள்ளன. இதில் 2010 வரை பயன்பாட்டிலுள்ள எளம்பலூரைச்சேர்ந்த துரை என்பவர் நடத்திவரும் கல்குவாரி யில் எளம்பலூர் இந்திரா நகரைச்சேர்ந்த கல்லுடைக்கும் தொழிலாளர்களான சின்னசாமிமகன் வீராசாமி(47), அண்ணாமலைமகன் தினேஷ்(22) இருவரும் 8ம்தேதிமாலை, தோட்டாக்களை வைத்து பாறையைப் பிளக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது வீராசாமி ஒவ்வொரு தோட்டாவுக்கும் கனெக்சன் கொடுத்துக் கொண் டிருந்த போதே, எதிர்பாராத விதமாக ஒருதோட்டா வெடித்ததில் வீராசாமி படுகாயம் அடைந்து சம்பவஇடத்திலேயே பலியானார். அருகிலிருந்த தினேஷ் படுகாயமடைந்து பெரம்பலூர் அரசுத்தலைமை மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக மருவத்தூர் எஸ்ஐ ராம்குமார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று பெரம்பலூர் எஸ்பி திஷாமித்தல் உத்தரவின் பேரில், திருச்சி மாநகர வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவு எஸ்ஐக்கள் ராஜமாணிக்கம், ரவிச்சந்திரன், ஏட்டுகள் ஆகியோர் அடங்கியகுழுவினர், மருவத்தூர் எஸ்ஐ ராம்குமாருடன் இணை ந்து மதியம் 2மணியளவில் செங்குணம் கல்குவாரியில் சோதனைநடத்தினர். அப் போது சிறுவாச்சூரிலுள்ள வெடிமருந்து செயல்பாட்டாளர் அசோகன் வரவழைக்கப் பட்டு விசாரிக்கப்பட்டார்.அதில் அசோகன், துரைநடத்தும் குவாரியில் பாறைகளை பிளப்பதற்காக சில தினங்களுக்குமுன்பு தான் 200 டெட்டனேட்டர்கள், 200ஜெலட்டின் குச்சிகள் வழங்கிய தாகத் தெரிவித்தார். இதனையடுத்து குழுவினர் குவாரியில் இறங்கி சோதனை நடத் தியபோது, அதில் 92இடங்களில் தோட்டாக்கள், ஜெலட்டின் குச்சிகளுடன் இணைத்து பதிக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தெரியாமல் கால்வைத்தால் வெடி க்கும் அபாயநிலையிலும், வெடிமருந்து கண்டுபிடிக்கும் மெட்டல் டிடெக்டரில் சோத னைசெய்து பதிக்கப்பட்டுள்ள தோட்டாக்களை அச்சத்துனேயே கணக்கிட்டனர்.

பிறகு அதே குவாரியில் 30மீட்டர் தூரத்தில் 45டெட்டனேட்டர்களும், தனியாக 5 டெட்டனேட்டர்களும், தோட்டாவை வெடிக்கச்செய்யும் 1பேட்டரி பாக்ஸையும் கண்டுபி டித்துக் கைப்பற்றினர். குவாரியின் மேலே 13ஜெலட்டின் குச்சிகளும் கைப்பற்றப்பட் டன. பின்னர் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவு எஸ்ஐ ராஜமாணிக்கம், மருவத்தூர் எஸ்ஐ ராம்குமார் ஆகியோர் வெடி குண்டு செயல்பாட்டாளர் அசோகனை அழைத்து, பாறைகளில் பதிக்கப்பட்டுள்ள டெட் டனேட்டர்களை விரைந்து செயலிழக்கச் செய்யும்படி உத்தரவிட்டனர்.பிறகு செங்குணம் குவாரியின் வெடிவிபத்து குறித்து அறிக்கை தயாரித்து உயர திகாரிகளுக்குத் தெரிவித்து, கைப்பற்றப்பற்ற டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சி களை சோதனைக்கு உட்படுத்தவும் திருச்சிக்கு எடுத்துச்சென்றனர்.


மேலும் மாவட்ட செய்திகள் வாசிக்க – பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

Leave a Reply

%d bloggers like this: