குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தில் பெண் தற்கொலை.

குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தில் பெண் தற்கொலை.


அயன்பேரையூர் கிராமத்தை சேர்ந்த அமலா குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அயன்பேரையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி அமலா(வயது 24). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதுவரை குழந்தை இல்லை. இதனால் கடந்த சில மாதங்களாகவே அமலா மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் ஒரு பகுதியில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 6 ஆண்டுகளே ஆனதால் வரதட்சணை கொடுமை ஏதும் நடந்துள்ளதா? என பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விசுவநாதன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.Leave a Reply

%d bloggers like this: