செஸ் போட்டி

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் குறு வட்ட அளவிலான செஸ் போட்டி

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் குறு வட்ட அளவிலான செஸ் போட்டி

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில், குறு வட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சதுரங்கப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கு. அருளரங்கன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் மாரி மீனாள், பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட உடல்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் போட்டிகளை தொடக்கி வைத்தார்.

இதில் 11, 14, 17 மற்றும் 19 வயது என 4 பிரிவுகளில் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. உடல்கல்வி ஆசிரியர்கள் ஸ்டான்லி, செந்தமிழ், ரவி, கண்ணன், சரவணன், விக்டோரியா, நடராஜ் ஆகியோர் நடுவர்களான பணியாற்றினர்.

இதில், பெரம்பலூர், வேப்பந்தட்டை ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த 322 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள், மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனர்.


அரியலூர் மாவட்டம்

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள கோகிலாம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை சார்பில், சுதந்திர தினம் மற்றும் பாரதியார் தினத்தை முன்னிட்டு குறுவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. போட்டியை பள்ளி தாளாளர் அன்பழகன் தொடக்கி வைத்து பேசினார். 11, 14, 17 மற்றும் 19 வயது ஆகிய பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டியில் 40 பள்ளிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாலையில் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, பள்ளியின் முதல்வர் சிவராமகிருஷ்ணா வரவேற்றார்.

தினமணி

Leave a Reply

%d bloggers like this: