குரும்பலூர் அரசு கல்லூரியில் 11 பாடப்பிரிவுகள் நீக்கம் : மாணவிகள் அவதி

குரும்பலூர் அரசு கல்லூரியில் 11 பாடப்பிரிவுகள் நீக்கம் : மாணவிகள் அவதி


பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஏற்கனவே இருந்து 11 பாடப்பிரிவுகள் நிகழாண்டு நீக்கப்பட்டதால் கிராமப்புற ஏழை, மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரில் கடந்த 18 ஆண்டுகளாக பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரியாக செயல்பட்டு கல்லூரி, நிகழாண்டு முதல் அரசு காலை மற்றும் அறிவியல் கல்லூரியாக செயல்பட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, இக்கலூரியில் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்ட 14 பாடப்பிரிவுகளில் 5 பாடப்பிரிவுகள் நிகழாண்டு பயிற்றுவிக்கப்படாது என கல்லூரி நிர்வாகம் அண்மையில் அறிவித்ததால் மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், முதுகலை பாடப்பிரிவுகளான எம்.ஏ தமிழ், ஆங்கிலம்,எம்.காம், எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.எஸ்.டபுள்யூ ஆகிய 6 பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறாது என கல்லூரி நிர்வாகம் தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது. இதனால் மேற்கண்ட பாடப்பிரிவுகளில் விண்ணப்பித்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Leave a Reply

%d bloggers like this: