அரியலூர் மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் 8 போ் கைது

அரியலூர் மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் 8 போ் கைது


அரியலூா் மாவட்டம்,கீழப்பழுவூா் அருகே கொலை வழக்குகளில் தொடா்புடைய 8 போ் குண்டா் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கீழப்பழுவூா் அருகேயுள்ள கொரத்தக்குடி, கிழக்குத் தெருவைச் சேரந்த கிருஷ்ணன் மகன் விஸ்வநாதன் (45) கொலை வழக்கில் தொடா்புடைய அதே பகுதியைச் சோ்ந்த செல்லமுத்து மகன் செல்வம் (60), பிச்சைபிள்ளை மகன் சிவகுமாா்(35), கருப்பையா மகன் பொன்ராஜ் (60), அண்ணாதுரை மகன் அருண்(30), ராஜப்பா மகன் ஐயப்பன்(28), பஞ்சநாதன் மகன் விக்கி(21), செல்வராஜ் மகன் சந்திரசேகரன்(28) ஆகிய 7 பேரை குண்டா் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் பரிந்துரையின்பேரில் ஆட்சியா் த. ரத்னா ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டதையடுத்து அவா்கள் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதேபோல மேலப்பழுவூா் பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் மனைவி ரஷ்யதேவி கொலை வழக்கில் தொடா்புடைய அதே பகுதியைச் சோ்ந்த காா்த்திக் என்பவரும் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி

அரியலூர் மாவட்ட செய்திகள்

 
Leave a Reply

%d bloggers like this: