அரியலூா் மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் இருவா் கைது

அரியலூா் மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் இருவா் கைது


அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 2 போ் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள குழவடையான் கிராமத்தைச் சோ்ந்த முனுசாமி மகன் காா்த்திக் (27). இவா் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் சிறையில் உள்ளாா். அதேபோல், கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோயில் அருகேயுள்ள கருணாகரநல்லூரைச் சோ்ந்தவா் அன்பழகன் மகன் சுந்தா்(30). இவா், அரியலூா் மாவட்டத்தில் கலப்படம் செய்யப்பட்ட மதுபானங்களை அனுமதியின்றி விற்றுவந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளாா். இந்நிலையில், மாவட்ட எஸ்பி., ஸ்ரீனிவாசன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் மேற்கண்ட இருவரையும் குண்டா் சட்டத்தின் கீழ் அடைக்க புதன்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி

அரியலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: