குண்டர் சட்டத்தில்

கொலை வழக்கில் கைதானவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை.

527

கொலை வழக்கில் கைதானவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை.

கொலை வழக்கில் கைதான சகோதரர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு சங்குப்பேட்டை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கோட்டை என்ற செங்கோட்டுவேல் (வயது 30). கஞ்சா வியாபாரியான இவரை கொலை செய்த வழக்கில் பெரம்பலூர் திருநகரை சேர்ந்த விஸ்வநாதன் மகன்கள் சிவா (வயது 26), ராமராஜ் என்கிற ராமராஜன் (24), அய்யனார் (21) ஆகிய 3 பேரை பெரம்பலூர் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்திருந்தனர். இந்த நிலையில் அவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, சிவா, ராமராஜன், அய்யனார் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவின் நகல் திருச்சி சிறையில் இருந்த சிவா உள்பட 3 பேரிடமும் போலீசார் நேற்று வழங்கினர்.

தினத்தந்தி

Our Facebook Page




%d bloggers like this: