கீழாநெல்லி – மருத்துவ குணங்கள்

1508

கீழாநெல்லி – மருத்துவ குணங்கள்

கீழாநெல்லி – மருத்துவ குணங்கள். மிக எளிதாக வயல் வரப்புகளிலும், ஈரமான நிலப்பரப்புகளிலும் காணப்படும் சிறு தாவர மூலிகை இந்த கீழாநெல்லி . பார்ப்பதற்கு புளியமர இலைகளை போன்று இருக்கும் இந்த இலைகளில் பில்லாந்தின் என்னும் மூலப்பொருளால் நல்ல கசப்பாக இருக்கும். இந்த கீழாநெல்லி நல்ல மருத்துவ குணம் கொண்டாதால் நமது முன்னோர்கள் இதைக்கொண்டு நோய்களை சரிசெய்து கொண்டனர்.

  • இதில் பொட்டாசியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து, மினரல்ஸ், கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கிறது.

இதை அரைத்து சாறாக்கி குடிக்கலாம். தோசை மாவில் கலந்து தோசையாகவும் ஊற்றலாம். கீழாநெல்லியை உலர்த்தி பொடியாக்கி மோரில் கலந்து குடிக்கலாம். வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இதன் வேரை சுத்தம் செய்து பசும்பாலுடன் அரைத்து குடிக்கலாம்.

மஞ்சள் காமாலை நோய்:

கீழாநெல்லி இலையை அரைத்து சிறு உருண்டையாக்கி தினம் ஒரு உருண்டை என தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை கட்டுப்படும். கசப்பை விரும்பாதவர்கள் கீரையை பொடியாக்கி நீரில் கொதிக்க வைத்து கொஞ்சம் சீரகத்தூள், இனிப்புக்கு பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து குடித்தால் காமாலை குணமாகும். மோரில் கலந்து குடித்தாலும் காமாலை குணமாகும்.

கல்லீரல் பிரச்சனை

கல்லீரலில் இருக்கும் நச்சுகளை அவ்வபோது வெளியேற்றவும் கல்லீரல் கோளாறுகள் உண்டாகாமல் இருக்கவும் கீழாநெல்லி சாறு குடிக்கலாம். மாதம் ஒரு முறை வெறும் வயிற்றில் கீழாநெல்லி இலையை அரைத்து சாறாக்கி பெரியவர்கள் 30 மிலி அளவிலும், சிறுவர்கள் 15 மிலி அளவிலும் குடித்துவந்தால் கல்லீரல் சுத்தமாகும். கல்லீரலில் சேர்ந்துள்ள நச்சுகள் வெளியேறும். கல்லீரல் பாதிப்பிலிருந்து எப்போதும் நம்மை பாதுகாப்பாக வைக்க கீழாநெல்லி உதவும்.

இதையும் வாசிக்கலாம் – பப்பாளி விதையின் அற்புத பயன்கள்.

சிறுநீரக கற்கள்

கீழாநெல்லியை மூன்றுமடங்கு அளவு நீர் சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும். நீர் ஒருபங்காக சுண்டியது அதை குடித்துவரவேண்டும். தினமும் ஒரு டம்ளர் அளவு இதை குடித்துவந்தால் சிறுநீரக கற்கள் உடைந்து சிறுநீரகத்தில் வெளியேறும். நச்சுகள் நீங்கி சிறுநீரகம் சிறப்பாக இயங்கும். மாதம் இருமுறை இப்படி குடித்துவருவது நல்லது.

சர்க்கரை நோயாளிகள்

தினமும் மூன்று வேளை உணவுக்கு முன்பு கீழாநெல்லி பொடியை அரைடீஸ்பூன் அளவு எடுத்துவந்தால் சர்க்கரை கட்டுக்குள் வரும். சர்க்கரை நோயாளிகள் இதை தவிர்க்காமல் எடுத்துவந்தால் டயாலிஸிஸ் செய்வதிலிருந்து தப்பிக்கலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பவர்கள் மருத்துவரது ஆலோசனையோடு இதை எடுத்துகொள்ள வேண்டும்.

வெள்ளைப்படுதல்

கீழாநெல்லி இலையை சாறு பிழிந்து சம அளவு நீர் சேர்த்து குடித்துவரலாம். அல்லது கீழாநெல்லி இலையை சாறு பிழிந்து 5 மடங்கு நீர்விட்டு ஒருபங்காக சுண்டியபிறகு குடிக்கலாம். காலை மாலை இரண்டு வேளையும் இதை குடிக்க வேண்டும். இந்த நீரை குடிப்பதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பும் குடித்த பிறகு அரைமணி நேரம் கழியும் வரையும் வேறு எந்த ஆகாரமும் சாப்பிடக்கூடாது. தொடர்ந்து குடித்துவந்தால் வெள்ளைப்படுதல் என்னும் பெரும்பாடு குறைவதை உணரமுடியும்.

வயிற்றுப்புண்

உடல் உஷ்ணம், வயிற்றில் புண், வாயில் புண் போன்றவை இருந்தால் கீழாநெல்லி இலையை அரைத்து விழுதாக்கி ஒரு டம்ளர் மோரில் அரை டீஸ்பூன் அளவு கலந்து இலேசாக உப்பு சேர்த்து குடித்துவந்தால் வயிற்றுபுண் குணமாகும். வயிற்று கோளாறுகள் நீங்கும்.

முடி உதிர்வை தடுக்க

தலை உஷ்ணத்தால் முடி உதிர்வு பிரச்சனை அதிகமாக இருப்பவர்கள் கீழாநெல்லி இலையை அரைத்து முடியில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து குளித்தால் முடி உதிர்வு சட்டென்று நிக்கும். உடலில் சரும வியாதிகள் இருப்பவர்கள் கீழாநெல்லி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து சருமத்தில் தடவி ஊறவைத்து குளித்தால் சரும பிரச்சனைகள் ஓடிவிடும்.
Leave a Reply

%d bloggers like this:
Verified by MonsterInsights