கிரிக்கெட் வீரர் அசோக் திண்டா முகத்தில் பந்து பட்டு காயம்.
இந்திய கிரிக்கெட் அணி வீரரான அசோக் திண்டாவுக்கு, முகத்தில் பந்து தாக்கியதால் காயமடைந்துள்ளார்.
சையது முஸ்தாக் அலி கோப்பைக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டுவரும் இந்திய பந்துவீச்சாளரான அசோக் திண்டா, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், பெங்கால் அணி வீரரான விவேக் சிங்குக்கு ஃபுல் டாஸாக பந்து ஒன்றை வீசினார்.
அதை திண்டாவை நோக்கியே அவர் திருப்பி அடிக்க, அந்த பந்து திண்டாவின் நெற்றியைப் பதம் பார்த்துள்ளது.
இதனால் மைதானத்திலேயே சுருண்டு விழுந்த அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் , அவருக்கு பெரிய அளவிலான காயம் ஏதும் இல்லை என மருத்துவனை வட்டாரம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பகின்றது.