கிணற்றில் மூழ்கிய மாணவர்

குளிக்க சென்றபோது கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவர் பிணமாக மீட்பு

630

குளிக்க சென்றபோது கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவர் பிணமாக மீட்பு

குளிக்க சென்றபோது கிணற்றில் மூழ்கிய மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ். விவசாயி. இவருடைய மகன் பெரியசாமி (வயது 15). இவர் லெப்பைக்குடிக்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்து பிளஸ்-1 செல்ல இருந்தார். இந்நிலையில் விடுமுறையில் வீட்டில் இருந்த பெரியசாமியை அவருடைய மாமா, பெரம்பலூர் அருகே செங்குணம் கிராமத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு விடுமுறையை கழிக்க அழைத்துச் சென்றார். நேற்று முன்தினம் குளிப்பதற்காக செங்குணம் கிராமத்தில் உள்ள கிணற்றுக்கு பெரியசாமி சென்றார். கிணற்றில் இறங்கி குளிக்க முயன்றபோது, அவர் தவறி கிணற்றுக்குள் விழுந்து மூழ்கினார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு வந்து, கிணற்றில் இறங்கி பெரியசாமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கிணற்றில் அதிக அளவில் தண்ணீர் இருந்ததால், பெரியசாமியை மீட்க முடியவில்லை. இதையடுத்து கிணற்றில் இருந்த தண்ணீரை மின் மோட்டார் வைத்து வெளியேற்றினர். இதையடுத்து நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் நேற்று முன்தினம் இரவு பெரியசாமியை தண்ணீருக்குள் இருந்து பிணமாக மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தினத்தந்தி

Our Facebook page




%d bloggers like this: