புதிய செய்தி :

சென்னையில் காவிாி மேலாண்மை வாாியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம்.

காவிாி மேலாண்மை வாாியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம்.

சென்னையில் வேளாண்மையை காக்க வலியுறுத்தியும், காவிாி மேலாண்மை வாாியம் அமைக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு மாணவா் இளையோா் கூட்டமைப்பினா் நேற்று சோறுண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காவிாி மேலாண்மை வாாியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வேளாண்மையை காக்க வலியுறுத்தியும், காவிாி மேலாண்மை வாாியம் அமைக்க வலியுறுத்தியும் மாணவா் இளையோா் கூட்டமைப்பினா் சோறுண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் பிரதமா் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவா் அமித்ஷா, தமிழக ஆளுநா் பன்வாாிலால் புரோகித், ஹெச்.ராஜா, தமிழிசை, முதல்வா் எடப்பாடி பழனிசாமி, நடிகா் ரஜினிகாந்த் ஆகியோரது முகமூடிகளை அணிந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

வேளாண்மையை அழித்துவிட்டால் சோறு கிடைக்காது என்பதை உணா்த்தவே இத்தகைய போராட்டத்தில் ஈடுபட்டதாக போராட்டக்காரா்கள் தொிவித்துள்ளனா்.

source: samayam
Leave a Reply