பிளாஸ்டிக் பொருள்

காலாவதியான பீர் குடித்தவருக்கு உடல் பாதிப்பு

600 150 JK Mahal 1

காலாவதியான பீர் குடித்தவருக்கு உடல் பாதிப்பு

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலை உப்போடை பகுதியில் உள்ள 6323 என்ற டாஸ்மாக் மதுபான கடையில் அதே பகுதியை சேர்ந்த முரளி என்பவர் நேற்று முன்தினம் இரவு மது அருந்த சென்றுள்ளார். அப்போது அவர் குறிப்பிட்ட பிரபலமான ஒரு நிறுவனத்தின் (கிங்க்பிஷ்ஷர்) பியரை வாங்கி குடித்தபொழுது அவருக்கு உடலில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தான் குடித்த பியர் பாட்டிலை பார்த்துள்ளார். அதில் ஒட்டப்பட்டிருந்த லேபிளில் சுமார் 4 மாதங்களுக்கு முன்பே அது காலாவதியாகி இருந்தது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து சம்மந்தப்பட்ட டாஸ்மாக் விற்பனையாளரிடம் கேட்டபோது தனக்கு எதுவும் தெரியாது என்றும் இது குறித்து நீங்கள் அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்றும் கூறிவிட்டார்களாம். இந்த பீயரை குடித்த தனக்கு உடல் உபாதையும், வயிறு எரிச்சல் மற்றும் நாக்கில் அரிப்பும் ஏற்பட்டுள்ளது என்றும், இதற்காக நான் தான் மருத்துவரிடம் செல்ல உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட முரளி நம்மிடம் தெரிவித்தார்.

இது சம்பந்தமாக பெரம்பலூர் டாஸ்மாக் மேலாளர் சிவதாஸ்டம் விசாரித்தபோது, இது குறித்து எனக்கு எந்த விதமான குற்றச்சாட்டுகளுக்கு வரவில்லை. சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறேன் என்று தெரிவித்தார்.

Source – News18

Okinawa

Kallaru TV
Leave a Reply

%d bloggers like this: