பாடாலூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலி 2 பேர் காயம்.

பாடாலூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலி 2 பேர் காயம்.
பாடாலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து வந்த கார் மீது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில் வெளிநாட்டிலிருந்து வந்த பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார். 2 பேர் காயம் அடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா பட்டக்கா வயல் கிராமத்தைச் சேர்ந்த முகமது உசேன் மனைவி சம்சீனீசா (42). இவரது உறவினர் முஜாகிதீன் (20) .இவர்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர்.இருவரையும் சென்னையிலிருந்து அழைத்து வருவதற்காக அவரது உறவினர் சாகுல் அமீது, தவ்ஹீத் ஆகியோர் சொந்தகிராமத்தில் இருந்து சென்னை சென்று இருவரையும் காரில் அழைத்துக் கொண்டு வந்தனர். காரை அதே பகுதியை சேர்ந்த சேதுராமன் மகன் அருண்குமார் (22) ஓட்டி வந்தார்.
கார் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே பூமலை என்ற இடத்தில் வந்த போது பின்னால் வந்த டிப்பர் லாரி காரின் மீது மோதியது. இதில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்சீனீசா சம்பவ இடத்திலேயே இறந்தார். சாகுல் அமீது, முஜாகிதீன் ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மாவட்ட செய்திகள் வாசிக்க – பெரம்பலூர் மாவட்ட செய்திகள்


Leave a Reply

%d bloggers like this: