வேலாயுதம்பாளையம் அருகே கார் – பைக் மோதல்: இளைஞர் பலி

வேலாயுதம்பாளையம் அருகே கார் – பைக் மோதல்: இளைஞர் பலி


வேலாயுதம்பாளையம் அருகே பைக் மீது கார் மோதியதில் வெள்ளிக்கிழமை மதியம் இளைஞர் இறந்தார்.

சேலம் மாவட்டம், சங்ககிரி அடுத்த காடையாம்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் தேவராஜன்(24). இவர் பைக்கில் திண்டுக்கல் சென்றுவிட்டு, மீண்டும் சேலம் நோக்கி வெள்ளிக்கிழமை பிற்பகலில் வேலாயுதம்பாளையம் அடுத்த கட்டிப்பாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் வழியிலேயே இறந்துவிட்டார்.

இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து கார் ஓட்டுநர் கரூர் கந்தபொடிக்காரத்தெருவைச் சேர்ந்த இளமுருகு (59) என்பவரைத் தேடி வருகின்றனர்.

தினமணி

கரூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: