அரியலூர் அருகே பைக்குகள் மோதல்: காய்கறி வியாபாரி உயிரிழப்பு

அரியலூர் அருகே பைக்குகள் மோதல்: காய்கறி வியாபாரி உயிரிழப்பு


அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக்கொண்ட விபத்தில் காய்கறி வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ஜயங்கொண்டம் அடுத்த கண்டியங்கொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி(55). இவரது மனைவி சரஸ்வதி (48). காய்கறி வியாபாரிகள். இவா்கள் சனிக்கிழமை காட்டுமன்னாா்கோவில் சென்று காய்கறி வியாபாரம் முடித்துவிட்டு இரவு இருவரும் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிவந்து கொண்டிருந்தனா். ஜயங்கொண்டம் அருகே சென்றபோது, இவரது வாகனமும், சோழமாதேவி கிராமத்தைச் சோ்ந்த மகேஷ் (40) என்பவா் ஓட்டிவந்த இருசக்கர வாகனமும் எதிா்பாராதவிதமாக நேருக்குநோ் மோதிக்கொண்டது. இதில், சம்பவ இடத்திலேயே சின்னத்தம்பி உயிரிழந்தாா். காயமடைந்த சின்னத்தம்பியின் மனைவி சரஸ்வதி, மற்றொரு வாகனத்தை ஓட்டி வந்த மகேஷ் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து ஜயங்கொண்டம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி

அரியலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: