காய்கறிகள் லாரி

தண்ணீர்பந்தல் அருகே காய்கறிகள் ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்தது

491

தண்ணீர்பந்தல் அருகே காய்கறிகள் ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்தது

சென்னைக்கு கத்தரிக்காய்-மிளகாய் ஏற்றி சென்ற மினி லாரி சாலையில் கவிழ்ந்தது.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் இருந்து விற்பனைக்காக கத்தரிக்காய் மற்றும் மிளகாய் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு ஒரு மினி லாரி நேற்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை மணப்பாறை தாலுகா அழகாபுரி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 31) என்பவர் ஓட்டிச் சென்றார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தல் அருகே சென்ற போது, லாரியின் முன்புற டயரில் ஒன்று திடீரென்று வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையில் கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த கத்தரிக்காய், மிளகாய் மூட்டைகள் சாலையில் கொட்டின. இதில் லாரியில் இருந்து வெளியேற முடியாமல் காயங்களுடன் தவித்து கொண்டிருந்த சக்திவேலை நெடுஞ்சாலை ரோந்து போக்குவரத்து போலீசார் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விபத்துக்குள்ளான மினி லாரியை அப்புறப்படுத்தப்படுத்தினர். கத்தரிக்காய், மிளகாய் மூட்டைகள் மாற்று லாரி மூலம் சென்னைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

Our Facebook Page
%d bloggers like this: