பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மரியாதை.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மரியாதை.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராஜர் சிலைக்கு, நகர காங்கிரஸ் தலைவர் சந்திரசேகர் தலைமையில், துணை தலைவர் முருகேசன், நிர்வாகிகள் அலெக்ஸாண்டர்,சின்னபொண்ணு, லட்சுமிபதி, மாவட்ட தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் பா.தேவர் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். வடக்கு வட்டார காங்கிரஸ் சார்பில்:… அரியலூர் வடக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் வாலாஜ நகரம், கயர்லாபாத், சுப்புராயபுரம் ஆகிய ஊராட்சிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. மேற்கண்ட ஊர்களில் அக்கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் கட்சிகொடியை ஏற்றி வைத்து, காமராஜர் திருவுருவப் படத்துக்கும மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருமானூரில்:… திருமானூர் பேருந்து நிலையம் அருகே, காமராஜர் படத்துக்கு, திருமானூர் வட்டார(கி) தலைவர் சீமான் தலைமையில், நகர தலைவர் வினோத்குமார், மகிளா காங்கிரஸ் தலைவர் மாரியம்மாள் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: