திட்டக்குடி அருகே கழுத்தில் அறுபட்ட நிலையில் வாலிபர் உயிரிழப்பு.

திட்டக்குடி அருகே கழுத்தில் அறுபட்ட நிலையில் வாலிபர் உயிரிழப்பு.


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வையங்குடி கிராமத்தில் அர்ஜுனன் மகன் மணிகுண்டு என்கின்ற மணிகண்டன் வயது 30 இவருக்கு சித்ரா என்ற மனைவியும் தர்ஷினி என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர். இவரது மனைவி சித்ரா திட்டக்குடி அரசு கல்லூரியில் பிஎஸ்சி பயின்று வருகிறார் வழக்கம்போல் இவரை மணிகண்டன் கல்லூரியில் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்த இவர் வீட்டிற்கு உள்ளே மர்மமான முறையில் கழுத்தில் அறுபட்டு இறந்து கிடந்தார். அருகில் உள்ளவர்கள் சிறிது நேரம் கழித்து அவரது வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இது சம்பந்தமாக அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து ஆவினங்குடி போலீசார் தகவலின் பேரில் மணிகண்டனை பார்வையிட்டு இது கொலையா தற்கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவினங்குடி போலீசார் பிரேத பரிசோதனைக்காக மணிகண்டனின் உடலை திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மணிகண்டனின் மனைவி சித்ரா கணவனின் உயிர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply

%d bloggers like this: