கள்ளத்தொடர்பு தகராறில்

கள்ளத்தொடர்பு தகராறில் பெண்ணை கொலை செய்தவர் கைது.

732

கள்ளத்தொடர்பு தகராறில் பெண்ணை கொலை செய்தவர் கைது.

வேப்பந்தட்டை அருகே பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, கள்ளத்தொடர்பு தகராறில் அவரை கொலை செய்த அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

அழுகிய நிலையில் பிணம்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தழுதாழையை சேர்ந்தவர் மீனாட்சி (வயது 60). இவர் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி மர்மமான முறையில் அவரது வீட்டில் அழுகிய நிலையில் மீனாட்சி பிணமாக கிடந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் தற்கொலை என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கொலை வழக்காக மாற்றம்

இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, கள்ளத்தொடர்பு காரணமாக ஏற்பட்ட தகராறில் மீனாட்சியை அரும்பாவூரை சேர்ந்த அரசு பஸ் டிரைவரான சுசீந்திரன் (40) என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த போலீசார், சுசீந்திரனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

Our Facebook Page
%d bloggers like this: