100 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை அளித்த அஸ்வின்ஸ் நிறுவனம்.

100 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை அளித்த அஸ்வின்ஸ் நிறுவனம்.


பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் நிறுவனம் சார்பில் 100 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவிக்தொகை வழங்கப்பட்டது.

பெரம்பலூரை தலைமையிடமாகக் கொண்ட அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனம் திருச்சி, சென்னை, நாமக்கல், ஆத்தூர், கரூர், துறையூர், அரியலூர், சேலம், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் பணியாளர்களை கெளரவிக்கும் விதமாக அவர்களது வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வாகவும் குடும்ப விழா நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, பெரம்பலூர் ராமகிருஷ்ணா கல்வி நிறுவன கூட்ட அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு, அந் நிறுவனத்தின் இயக்குநர் வரதராஜன் தலைமை வகித்தார். இயக்குநர்கள் செல்வக்குமாரி கணேசன், சிபி, நிஷாசிபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். சிவசுப்ரமணியன், செயலர் எம்.எஸ். விவேகானந்தன் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில், அஸ்வின்ஸ் நிறுவனத் தலைவர் கே.ஆர்.வி. கணேசன், சிறப்பாகப் பணிபுரிந்த பணியாளர்களுக்கு பரிசு, அவர்களது வாரிசுகளான 100 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிப் பாராட்டிப் பேசினார். விழாவையொட்டி, தொலைக்காட்சி கலைஞர்களின் மிமிக்ரி, மேஜிக் மற்றும் நகைச்சுவை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில், அஸ்வின்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 200-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வெங்கடேசன், அசோக், கிரிஜா, சரவணண், கபிலன், சுரேஷ், சசி ஆகியோர் செய்திருந்தனர்.
Leave a Reply

%d bloggers like this: