தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வித்துறையின் புதிய உத்தரவு.
தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக முக்கிய உத்தரவு.
கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலையில் உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்பட்டு வருகின்றன. எனவே தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மட்டுமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்வதிலும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
தற்போது தடுப்பூசி செலுத்தி கொள்ள இளைஞர்கள் முன்வந்த வண்ணம் உள்ளனர். இச்சூழலில் தடுப்பூசி ஒன்றே தீர்வாக இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், அலுவலர்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனே அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
பிறகு தடுப்பூசி போட்டுக் கொண்ட விவரத்தை பள்ளிக்கல்வித்துறையின் இணையதளத்தில் பதிவிட வேண்டும். இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கோவிட்-19 ஷீட்டில் அப்டேட் செய்ய வேண்டும். அதில் முதல் தவணையா? இரண்டாவது தவணையா? மொத்தம் எத்தனை தடுப்பூசி போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும். இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தெரிவித்து தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். இந்த சூழலில் ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது பள்ளிகள் திறப்பின் போது மிகவும் நம்பிக்கையுடன் பணியாற்ற உதவிகரமாக இருக்கும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
You must log in to post a comment.