அரியலூர் மாவட்டம், அரசு தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா

அரியலூர் மாவட்டம், அரசு தொடக்கப்பள்ளியில் பொதுமக்கள் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழகுடியிருப்பு அரசு தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் அசோகன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் ஆறுமுகம் வரவேற்றார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாலாஜி முன்னிலை வகித்தார். விழாவில் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசினர்.
தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட பள்ளிக்கு தேவையான ரூ.25 ஆயிரம் மதிப்பிலான மேஜை, நாற்காலி, கணினி, பீரோ, பாத்திரங்கள் மற்றும் தலைவர்களின் உருவபடங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கப்பட்டது.
இதில் ஆசிரியர் பயிற்றுனர்கள் தாமோதரன், அன்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி உதவி ஆசிரியை அமுதா நன்றி கூறினார்.
தினத்தந்தி

23total visits,2visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: