மங்களமேடு அருகே அனுமதியின்றி மணல் எடுக்க சென்ற கல்லூரி மாணவர் சாவு

மங்களமேடு அருகே அனுமதியின்றி மணல் எடுக்க சென்ற கல்லூரி மாணவர் சாவு


பெரம்பலூர் மாவட்டம்,  குன்னம் வட்டத்துக்குள்பட்ட எறையூர் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் துரை (40). இவருக்குச் சொந்தமான டிராக்டரை வெள்ளிக்கிழமை இரவு எடுத்துக்கொண்டு அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான முத்து மகன் வெங்கடேசன் (20),  இவரது நண்பர்கள் கார்த்திக் (18), ரமேஷ் (18), அஜித் (16), ரஞ்சித் (18) ஆகியோர் பென்னக்கோணம் கிராமத்தில் ஓடும் சின்னாற்றில் அரசு அனுமதியின்றி மணல் எடுக்கச் சென்றனராம். அப்போது, சுமார் 5 அடி ஆழ பள்ளத்தில் மணல் எடுக்க வெங்கடேசன் கீழே இறங்கினாராம். அப்போது எதிர்பாராதவிதமாக மணல் சரிந்ததில் மணலுக்கு அடியில் சிக்கிக்கொண்ட வெங்கடேசனை அவரது நண்பர்கள் மீட்டனர்.

ஆனால், மூச்சுச் திணறலால் வெங்கடேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை கொண்டு வந்து வீட்டுக்கு வெளியே போட்டு விட்டு அவரது நண்பர்கள் தப்பி விட்டனராம். தகவலறிந்த மங்களமேடு போலீஸார் வெங்கடேசனின் உடலைக் கைப்பற்றி பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர்.

சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்த போலீஸார் டிராக்டரை பறிமுதல் செய்து, தப்பியோடியவர்களைத் தேடி வருகின்றனர்.

தினமணி

மேலும் மாவட்ட சேய்திகளை வாசிக்க – பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

     
Leave a Reply

%d bloggers like this: