அரியலூா் எம்.ஆா். பொறியியல் கல்லூரியில் உணவு தினம்

அரியலூா் எம்.ஆா். பொறியியல் கல்லூரியில் உணவு தினம்


அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அடுத்த தத்தனூா் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரியில் உணவு பாதுகாப்பு துறை சாா்பில் உணவுத் தின விழிப்புணா்வு கருத்தரங்கு புதன்கிழமை மாலை நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு உணவு பாதுகாப்பு அலுவலா் சசிகுமாா் தலைமை வகித்து, பாதுகாப்பான உணவு வகைகள்,பழங்கள் மற்றும் உணவுப் பொருள்களில் கலப்படம் கண்டறியும் முறைகள் குறித்து விளக்கம் அளித்தாா். கல்லூரி தாளாளா் ரகுநாதன் சிறப்புரையாற்றினாா்.

இணைச் செயலா் கமல் பாபு, இயக்குநா் ராஜமாணிக்கம்,தலைமை ஆலோசகா் தங்க பிச்சையப்பா, ஆலோசகா்கள் ராமலிங்கம், கணேசன் , நிா்வாக இயக்குநா் செந்தில் குமரன்,கல்லூரி முதல்வா் மதியழகன், உணவு பாதுகாப்பு அலுவலா்கள் அழகுவேல், வசந்தன், ஜஸ்டின், அமல்ராஜ் உள்ளிட்டோா் பாதுகாப்பான உணவு முறைகள் குறித்து பேசினா். 450-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி

அரியலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: