சண்டை காட்சிகளில் கலக்கப் போகும் சாய் பல்லவி

சண்டை காட்சிகளில் கலக்கப் போகும் சாய் பல்லவி


தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி தற்போது களறி சண்டையை கற்று வருகின்றார்.

சமீபத்தில் வெளியான ‘மாரி 2’. படத்தில் இவர் தனுஷுடன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவர் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. குறிப்பாக இவரும், தனுசும் ஆடிய, ரவுடி பேபி பாடல் பல சாதனைகளை படைத்துள்ளது.

அப்படத்தை அடுத்து தற்போது மீண்டும் மலையாளத்துக்கு சென்றுவிட்டார் சாய் பல்லவி. “அதிரன்” என்ற  படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். விவேக் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் சாய் பல்லவிக்கு மலையாளத்தில் இது மூன்றாவது திரைப்படம் என்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் பஹத் பாசில் மனோதத்துவ நிபுணராக நடிக்க சாய் பல்லவி களறி சண்டை கற்றுத்தரும் பெண்ணாக நடிக்கிறார். தற்போது அதற்காக களறி சண்டையை முறைப்படி கற்று வருகிறார்.அவர் சண்டை கற்கும் போது எடுத்த வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் வெறித்தனமாக களறி சண்டை போடுகிறார் சாய் பல்லவி.

இப்படத்தை பற்றி சாய் பல்லவி கூறியதாவது,  ‘கதாபாத்திரத்தை உணர்ந்து அதில் மெய்மறந்து நடிப்பது எனது பாணி. களறி சண்டை போடுவதாக சும்மா படக்கருவிக்கு காட்சிதருவதில் எனக்கு விருப்பம் கிடையாது. அப்படி விரும்பும் இயக்குனர்களிடமும் நான் பணியாற்றுவது கிடையாது என்கிறார் சாய் பல்லவி.

“மலர் டீச்சராக” மனதில் நின்று, “ரவுடி பேபியாக” மாரி (2) இப்போ மலையாளத்தில் “களறி டீச்சராக” களமிறங்க உள்ளார் இந்த சாய் பல்லவி.

65total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: