மாடு

பெரம்பலூரில் இன்று முதல் கறவை மாடு பராமரிப்பு இலவசப் பயிற்சி வகுப்புகள்.

6

பெரம்பலூரில் இன்று முதல் கறவை மாடு பராமரிப்பு இலவசப் பயிற்சி வகுப்புகள்.

பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் புதன்கிழமை (ஜூன் 26) முதல் கறவை மாடு பராமரிப்பு தொடர்பான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்புப் பயிற்சி மையத்தில் கறவை மாடு பராமரிப்பு பயிற்சி வகுப்பு புதன்கிழமை முதல் இலவசமாக அளிக்கப்படுகிறது.

இதில் பங்கேற்க, 18 முதல் 45 வயதுக்குள்ளும், எழுத – படிக்கத் தெரிந்தவராகவும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும். தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இப் பயிற்சியானது காலை 9.30 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு ஐ.ஓ.பி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், ஷெரீப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூர் – 621212 எனும் முகவரியிலோ, 04328 277896 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: