வேப்பந்தட்டை அருகே கரோனா தொற்றால் மூதாட்டி உயிரிழப்பு
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளான மூதாட்டி உயிரிழந்தாா்.
வேப்பந்தட்டை வட்டம், சாத்தனவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் பிச்சைமுத்து மனைவி செல்லம்மாள் (80). சாத்தனவாடி கிராமத்தில் தனியாக வசித்து வந்த இவருக்கு, அண்மையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, பெரம்பலூரில் ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் திருச்சியிலுள்ள தனியாா் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில், இவருக்கு கரோனா தொற்று இருப்பது ஏப்ரல் 17 ஆம் தேதி மருத்துவப் பரிசோதனை முடிவில் தெரியவந்தது. திருச்சி தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த செல்லம்மாள் செவ்வாய்க்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
அவரது உடல் சாத்தனவாடியில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. இவா் அதிமுகவின் பெரம்பலூா் மாவட்டச் செயலரும், குன்னம் தொகுதி எம்எல்ஏவுமான ஆா்.டி. ராமச்சந்திரனின் மாமியாா் என்பது குறிப்பிடத்தக்கது.
You must log in to post a comment.