ஒரு பேன் மற்றும் லைட் ஆனா கரெண்ட் பில் ரூபாய் 128 கோடி! 

ஒரு பேன் மற்றும் லைட் ஆனா கரெண்ட் பில் ரூபாய் 128 கோடி!

உத்திர பிரதேசத்தில் ஒரேயொரு பேன் மற்றும் லைட்டை மட்டும் பயன்படுத்தும் வீட்டிற்கு  மின் கட்டணமாக ரூ.128 கோடி வந்துள்ளது. 128 கோடி மின்சார கட்டணம் செலுத்தும்படி முதியவர் ஒருவருக்கு பில் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சரியாக அந்த கரெண்ட் பில்லின் மதிப்பு ரூ. 128 கோடியே 45 லட்சத்து 95 ஆயிரத்து 444 மின் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஹாபூர் மாவட்டத்திலுள்ள சாம்ரி கிராமத்தில் வசித்து வருபவர் ஷமீம்.  இவரது வீட்டுக்கு மாதாந்திர மின்சார கட்டண செலுத்த வேண்டி பில் வந்தது. வந்த பில்லில்  அவர் ரூ. 128 கோடியே 45 லட்சத்து 95 ஆயிரத்து 444 மின் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த ஷமீம் மட்டுமல்லாது அந்த ஊரிலுள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மின்சார கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது என்பது தான் அதைவிட கொடுமையானது.

இது குறித்து ஷமீம் செய்தியாளர்களிடம் பேசிய போது, எங்கள் வீட்டில் ஒரு மின் விசிறி மற்றும் ஒரு மின் விளக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம். பின் எப்படி எங்களுக்கு இவ்வளவு பெரிய தொகை வரமுடியும்? சராசரியாக மாதத்திற்கும் ரூ. 700 அல்லது ரூ.800 வரை மின் கட்டணம் செலுத்த வேண்டி வரும். மின்வாரியத்தில் நான் இதைப் பற்றி  புகார் செய்தும் ஒருவரும் கண்டு கொள்ளவில்லை என்றார். மின்வாரியத்துறையினரிடம் இதுகுறித்து கேட்டபோது “தொழில்நுட்ப கோளாராக இருக்கலாம். விரைவில் ஆய்வு செய்து முறையான பில் கொடுக்கப்படும்”என்று தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடமும் உத்திர பிரதேசத்தில் காய்கறி கடை வைத்திருந்த ஜெகன்னாத் என்பவருக்கு ரூ. 8.64 லட்சம் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என பில் வந்தது. இது தொடர்பாக அவர் மின் வாரியத்திற்கு பலமுறை அலைந்து திரிந்தும் பலனில்லாத நிலையில் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது பில்லில் தசமபுள்ளி விடுபட்டு போனதில் ஏற்பட்ட தவறு என்று கூறியது மின்வாரியம். அந்த தவறுக்காக மின் வாரிய கணக்கர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்துவிட்டதாக மின் வாரியம் அப்போது தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

%d bloggers like this: