கால்பந்து போட்டியில் கரூர் அணிகளுக்கு கோப்பை

கால்பந்து போட்டியில் கரூர் அணிகளுக்கு கோப்பை


கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான மூவர் கால்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த ட்ரீம் பிக்சாக்கர்ஸ் அணிக்கு முதல்பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

கரூரில் யுனிவர்சல் கால்பந்து சங்கம் சார்பில், இரண்டாம் ஆண்டு மாவட்ட அளவிலான மூவர் கால்பந்து போட்டிகள் கரூர் தாந்தோணிமலை என்ஆர்எம் விளையாட்டுத் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 12 அணிகள் பங்கேற்றன. தொடர்ந்து நடைபெற்ற இறுதிப்போட்டியில் கரூர் ட்ரீம் பிக் சாக்கர்ஸ் அணியும், எலைட் கால்பந்து அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ட்ரீம் பிக் சாக்கர்ஸ் அணி 6-0 என்ற கோல் கணக்கில் எளிதில் வென்றது.

இதைத்தொடர்ந்து, வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பை வழங்கும் நிகழ்ச்சி மாலையில் நடைபெற்றது. முதலிடம் பிடித்த ட்ரீம் பிக் சாக்கர்ஸ் அணிக்கு ரூ.3,000 மற்றும் கோப்பை, சான்றிதழ்கள், பதக்கம் ஆகியவற்றையும், இரண்டாமிடம் பிடித்த எலைட் அணிக்கு ரூ.2,000 மற்றும் கோப்பை, சான்றிதழ் ஆகியவற்றையும் என்ஆர்எம் பள்ளி முதல்வர் சுப்ரமணியம் வழங்கினார்.

தினமணி

கரூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: