கரூரில் கஞ்சா பதுக்கிய இரு இளைஞர்கள் கைது

கரூரில் கஞ்சா பதுக்கிய இரு இளைஞர்கள் கைது


கரூரில் ரூ.11,000 மதிப்புள்ள கஞ்சா பதுக்கிய இரு இளைஞர்களைப் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

கரூர் வெங்கமேடு என்எஸ்கே நகரில் இரு இளைஞர்கள் விற்பனைக்காக கஞ்சாவைப் பதுக்கி வைத்திருப்பதாக வெங்கமேடு போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை இரவு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து போலீஸார் அங்குசென்று சோதனை செய்தபோது, விற்பனைக்காக ரூ.11,600 மதிப்புள்ள 1,800 கிராம் கஞ்சா வைத்திருந்த வெங்கமேடு எஸ்பி காலனியைச் சேர்ந்த மோகன்(27), குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த பிரபாகரன்(24) ஆகியோரைக் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி

கரூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: