புதிய செய்தி :

கம்ப்யூட்டர் கிபோர்ட் சார்ட்கட்ஸை தெரிந்துக் கொள்வோம்.

கம்ப்யூட்டர் கிபோர்ட் சார்ட்கட்ஸை தெரிந்துக் கொள்வோம்.


சில பேரை கம்ப்யூட்டருல வேலை செய்றத பார்க்கும் போது நமக்கு பொறாமையா இருக்கும். ஏன்னா அவங்க கீபோர்டை உபயோகிப்பது அவ்வளவு லாவகமா இருக்கும். சில அலுவலகங்களில் சிலபேர் அந்த கீபோர்டை பார்த்து பார்த்து டைப் பன்றதும் பிறகு மவுசை ஒரு மார்க்கமாக கையாலுவதையும் பார்த்தா சார்/மேடம் எழுந்திருங்க நானே அப்டேட் செஞ்சிடுறேன் என்று கடுப்பாகுற அளவிற்கு அவங்க வேலை இருக்கும்.

நீங்க உங்க கம்ப்யூட்டர் கீபோர்டுல சும்ம சரமாரியா விளையாடனுமா கீழுள்ள சார்ட்கட்டை பயன் படுத்தி பாருங்க. நீங்களும் கலக்கலாம் ஒரு ரெண்டு வாரத்திற்கு கொஞ்சம் கஷ்டமா தெரியும் பழகிட்டீங்க.. கலக்குவீங்க சரி விசயத்திற்கு போவோம்.

மொதல்ல நான் ஒன்னு சொல்லிக்கிறேன் கீழுள்ள சார்ட்கட்ஸ்ல சில ஐட்டம் உங்களுக்கு தெரிஞ்சும் கூட இருக்கலாம்.  இதுதான் எனக்கு தெரியுமேன்னு திட்டாதீங்க இது தெரியாதவங்களுக்காக மட்டும். அதிகமா போடல 5 மட்டும்தான் போட்டிருக்கேன். அடுத்தடுத்த பதிவுகளில் இதைபோல அப்டேட் செய்கிறேன்.

01. Ctrl+Z

இந்த சார்ட்கட் பயன்படுத்துவதன் மூலமா பழைய நிலைக்கு செல்ல உதவும். அதாவது ஒரு வேலையை தவறுதலாக செய்துவிட்டதால் அது தேவையில்லை என்றால் உடனே Ctrl+Z அழுத்துவதன் பழைய நிலைக்கு செல்ல முடியும். இது ஒரு குறிப்பிட்ட வரையில் பின்னோக்கி செல்ல முடியும். ஒரே ஒரு முக்கியமான கண்டிசன்  என்னவென்றால் அந்த கோப்புகளை சேவ் செய்துவிடாமல் இருக்கும் வரைதான் இந்த Ctrl+Z வேலை செய்யும். சேவ் என்னும் சேமிப்பு ஆப்ஸன் கொடுத்துவிட்டால்  Ctrl+Z சார்ட்கட் வேலை செய்யாது.

02. Ctrl+A

இந்த சார்ட்கட் அந்தந்த டாக்குமெண்ட்டுகளை மொத்தமாக செலக்ட் செய்ய உதவுகிறது. ஒவ்வொன்றாக செலக்ட் செய்யாமல் ஒட்டுமொத்தமாக இருக்கும் அனைத்து டாக்கு மெண்ட்டுகளை செலக்ட் செய்ய உதவுகிறது. இந்த முறையில் எம் எஸ் வேர்ட், எக்ஸெல் போன்றவற்றிலும் பயன்படுத்தி செலக்ட் செய்யமுடியும்.

03. Alt+F4

நமது கம்ப்யூட்டரில் பல விண்டோக்களை திறந்துவைத்து வேலை செய்துக் கொண்டிருப்போம். எந்த விண்டோஸ் தேவையில்லையோ அதை குளோஸ் செய்ய Alt+F4 இந்த சார்கட் பயன்படுகிறது. இதே முறையில் பல இன்டெர்நெட் டேப்கள் திறந்து வைத்திருந்தாலும் அதை இந்த Alt+F4 சார்ட்கட்மூலம் மூட முடியும் அதாவது க்ளோஸ் செய்ய முடியும்.

04. Ctrl+C

கம்ப்யூட்டர்பற்றி தெரிந்த அனைவருக்கும் இந்த சார்ட்கட் கண்டிப்பாக தெரிந்திருக்கும். குறிப்பிட்ட ஒரு பைலையோ அல்லது ஒரு போல்டரையோ அல்லது எழுத்துக்களையோ எதுவாகிலும் காப்பி செய்ய இந்த Ctrl+C சார்ட்கட் மிக அவசியமானதாக இருக்கிறது.

05. Ctrl+P

இந்த சார்ட்கட்டும் அது மேலுள்ளது போன்றுதான்  குறிப்பிட்ட ஒரு பைலையோ அல்லது ஒரு போல்டரையோ அல்லது எழுத்துக்களையோ எதுவாகிலும் காப்பி செய்ததை மற்றொரு இடத்தில் அந்த காப்பியை சேமிப்பதற்கு அதாவது பேஸ்ட் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த சார்ட்கட்டுகளைப்பற்றி விபரமான எளிமையான வீடியோவாக எமது கல்லாறு இஸ்லாம் யுடியுப் சேனலில் விரைவில் அப்டேட் செய்ய இருக்கிறோம். அதைபாருங்கள் படியுங்கள்..

அடுத்த பதிவில் இன்னும் சில சார்ட்கட்டுகளை பார்க்கலாம்…

 
Leave a Reply