தமிழில் “96” இப்போ கன்னட ரீமேக்கில் “99” ட்ரெய்லர் வந்துடுச்சி!

தமிழில் “96” இப்போ கன்னட ரீமேக்கில் “99” ட்ரெய்லர் வந்துடுச்சி!


விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் தமிழில் ஹிட் அடித்த திரைப்படம், ’96’. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ சி.பிரேம்குமார் இயக்கியிருந்த இந்தப் படம், தமிழில் பெரிதும் ஹிட் அடித்தது. கடந்த ஆண்டின் பல விருதுகளை இந்தப் படம் பெற்றது. கோவிந்த் வசந்தா இசை பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் கன்னட மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. தற்போது இதன் ட்ரைலர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கன்னடத்தில் விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் கணேஷூம், த்ரிஷா கதாபாத்திரத்தில் பாவனாவும் நடித்துள்ளனர். பள்ளி மாணவர்களாக நடித்த ஆதித்யா பாஸ்கர், கௌரி கதாபாத்திரங்களில் ஹேமந்த், சமிக்‌ஷா நடித்துள்ளார்கள். தமிழில் ‘96’ என்று பெயரிடப்பட்டிருந்த இந்தப் படத்துக்கு கன்னடத்தில் ‘99’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இயக்குனர் ப்ரீதம் குப்பி இயக்கிவரும் இப்படம் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கிவிட்டது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் படத்தில் விஜய்சேதுபதி கதாபாத்திரம் தோற்றமளிக்க  கூடுதலாக 4 கிலோ உடல் எடையை அதிகப்படுத்தியதாக நடிகர் கணேஷ் கூறியுள்ளார். இப்படத்திற்கு அர்ஜூன் ஜன்யா இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ட்ரைலரை பார்த்த நம்மவூர் ரசிகர்கள் படத்தின் ஹீரோவை மோசமாக கலாய்த்து வருகின்றனர். ஹீரோயின் பாவனா பழக்கப்பட்ட முகம் என்பதால் ஓகே. என்ன தான் இருந்தாலும் நமக்கு விஜய்சேதுபதி – திரிஷா தான். அவர்களின் அந்த உணர்வுபூர்வமான நடிப்பு இன்னும் எத்தனை மொழிகளில் ரீமேக் எடுத்தாலும் வராது.

60total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: