கனமழையால் இடிந்த அரசு பள்ளி கட்டிடம்: மின்னல் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

கனமழையால் இடிந்த அரசு பள்ளி கட்டிடம்: மின்னல் தாக்கி சிறுவன் உயிரிழப்பு


கன்னியாகுமரியில் பலத்த மழை பெய்ததில் அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது. மின்னல் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் மதியம் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து நள்ளிரவிலும் இடி, மின்னலுடன் மழை கொட்டியது. பூதப்பாண்டியை அடுத்துள்ள கடுக்கரை அரசு உயர்நிலைப் பள்ளி கட்டிடத்தின் ஓட்டுகூரை கனமழை காரணமாக முழுவதுமாக இடிந்து விழுந்தது. தற்போது பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த பழைய கட்டிடம் பயன்பாட்டில் இல்லை என்றாலும், பள்ளி நேரத்தில் இடிந்து விழுந்திருந்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.

திற்பரப்பு பகுதியில் நேற்றுமுன்தினம் பெய்த மழையின்போது, மாஞ்சாங்கோணத்தில் வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் அருணாஜோயி(12) மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.

இந்து தமிழ் திசை
Leave a Reply

%d bloggers like this: