கத்தாரில் வெளிநாட்டுப் பணியாளர்களிடம் ஐடி சோதனைகள் தீவிரம்!

Hits: 6

கத்தாரில் வெளிநாட்டுப் பணியாளர்களிடம் ஐடி சோதனைகள் தீவிரம்!


கத்தாரில் கடந்த சில தினங்களாக சட்ட விரோமாக தங்கியிருக்கும் வெளிநாட்டுப் பணியாளர்களை சோதனையிடும் நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய தகவல்கள் தெரிவிக்கின்றன. கத்தாரில் செனய்யா, சோலிய்யா, உட்பட தொழிலாளர்கள் அதிகமாக தங்கியிருக்கும் பகுதிகளில் இந்த சோதனை நடவடிக்கைகள் அதிகம் இடம்பெறுகின்றன.

சட்ட விரோமாக கத்தாரில் தங்கியிருப்பவர்கள் பிடிக்கப்பட்டால் மறுபடி கத்தாருக்கு வர முடியாத நிலையில் (FINGER) எடுக்கப்பட்டு, பின்னர் அரச செலவில் அவர்களது தாயங்களுககு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். கையில் செல்லுபடியாக ID இல்லாதவர்கள், ஒரு நிறுவனத்தில் விசாவை வைத்துக் கொண்டு இன்னொரு நிறுவனத்தில் பணியாற்றுதல் போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளை மீறுபவர்கள் தயவு தாட்சண்யமின்றி கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் இனி வாழ்நாளில் கத்தாருக்கு செல்லமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

நண்பர்களே! தயவு செய்து தங்களது அறைகளைவிட்டு வெளியே செல்லும் போது QATAR IDயை உடன் வைத்துக் கொள்ளுமாறும், செல்லுபடியான ID இல்லாதவர்கள் உரிய முறையில் கூடிய சீக்கிரம் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
Leave a Reply