அரியலூர் மாவட்டத்தில் 271 பேர் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு எழுதினார்கள்.

அரியலூர் மாவட்டத்தில் 271 பேர் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு எழுதினார்கள்.


ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அரியலூர் மாவட்டத்தில் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வை 271 பேர் எழுதினார்கள்.
அரியலூர் மாவட்டத்தில் முதுகலை கணினி ஆசிரியர்களுக்கான நிலை 1, கணினி வழியிலான தேர்வு தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் நேற்று நடந்தது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அரியலூர் மாவட்டத்தில் முதுகலை கணினி ஆசிரியர்களுக்கான நிலை 1, கணினி வழியிலான தேர்வு தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் நேற்று நடந்தது. இந்த தேர்வினை எழுதுவதற்கு 305 பேர் தகுதி பெற்றிருந்தனர். நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய கணினி வழியிலான தேர்வு மதியம் 1 மணி வரை நடந்தது. இந்த தேர்வை 271 பேர் எழுதினர். 34 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையத்தை தமிழ்நாடு கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் பொன்.குமார், அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Leave a Reply

%d bloggers like this: