கடித்த பாம்பை கடித்துக் கொன்ற 70 வயது முதியவர் பலி!

Hits: 0

கடித்த பாம்பை கடித்துக் கொன்ற 70 வயது முதியவர் பலி!


பாம்பை பிடித்த போது தன்னை கடித்த பாம்பை தானும் கடித்துக் கொன்ற முதியவர். விசம் உடலில் ஏறியதில் முதியரும் உயிரழந்தார். இந்த சம்பவம், குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டத்தில் அஜன்வா கிராமத்தில் நடந்துள்ளது.

மக்காச்சோளம் வயல்வெளியில் மக்காசோளத்தை லாரியில் தொழிலாளர்கள் ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கே பாம்பு இருந்ததை கண்ட அனைவரும் அதிர்ச்சியில் அங்கிருந்து  தப்பியோடினர்.

ஆனால் பர்வாத் கலா பாரியா என்ற 70 வயது முதியவர் தனக்கு பாம்புகளை பிடித்துள்ள முன்அனுபவம் உள்ளது என கூறி அங்கேயே நின்றதாக தெரிகிறது. இதையடுத்து அவர் பாம்பை கையில் பிடிக்க முயன்றபோது அது அவரது கைகள் மற்றும் முகத்தில் கடித்துள்ளது. உடனே ஆத்திரமடைந்த பாரியா பதிலுக்கு பாம்பை கடித்து கொன்று விட்டார்.

இதையடுத்து மயக்கமடைந்த பர்வாத் கலா பாரியாவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் விஷம் ஏறியதில் சிகிச்சை பலனின்றி பர்வாத் உயிரிழந்து விட்டார்.

இதுபற்றி அஜன்வா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Leave a Reply