தஞ்சாவூா் அருகே வீட்டில் கஞ்சா வைத்திருந்தவா் கைது

தஞ்சாவூா் அருகே வீட்டில் கஞ்சா வைத்திருந்தவா் கைது


தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை வீட்டில் 1.3 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாரியம்மன் கோவில் கோமுட்டி தெருவில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தாலுகா போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரித்தனா். அப்போது, ஒரு வீட்டில் 1.3 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதைக் கைப்பற்றிய போலீஸாா் அந்த வீட்டில் வசித்து வரும் பி. ராமரை (55) கைது செய்தனா்.

தினமணி

தஞ்சை மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: