Stomp

கஃபே உணவகத்தில் முகத்துக்கு செல்ப் சேவிங்க் செய்த நபர்.

கஃபே உணவகத்தில் முகத்துக்கு செல்ப் சேவிங்க் செய்த நபர்.

கஃபே போன்ற உயர்மட்ட உணவகங்களில் ஒரு கப் காப்பியோ, தேநீரோ அது போல மற்ற ஏதோ ஒன்று வாங்கிக் கொண்டு மணிக்கணக்கில் உட்கார்ந்து ரசித்து குடிக்கிற ஆட்களைப் பார்த்திருக்கிறோம். சில பேர் அந்த கப்பில்  என்ன விழுகிறதென்று தெரியாமல் எதையாவது படித்துக்கொண்டு இருக்கிறதைப் பார்த்திருப்போம். இன்னும் சிலர் அலுவலகத்தில் பார்க்கும் வேலையை இந்த மாதிரி கஃபே வில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் சிங்கப்பூரில் ஒருத்தர் வித்தியாசமா செஞ்சி பிரபலமாகிவிட்டார். ஆமாம் தனக்குத் தேவையான குளிர் பானத்தை ஆர்டர் செய்துவிட்டு அப்படியே டிரிம்மர் எடுத்து முகத்தை சேவ் செய்ய ஆரம்பித்து விட்டார். இதைப் பார்த்தவர் சும்மா இருப்பாரா?

இந்த மாதம்  7-ம் தேதி சிங்கப்பூர் காலாங் வேவ்வில் ‘காப்பி பீன் அன்ட் டீ லீவ்’ எனும் உணவகத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கிம் என்பவர் இந்த சம்பவத்தை நேரில் பார்த்துள்ளார். அவர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ‘நான் அங்கு காலை 10.30 மணியளவிலிருந்தேன், அப்போது ஒருவர் எதையோ ஆர்டர் செய்தார். பிறகு தன்னிடமுள்ள சிறிய டிரிம்மரைக் கொண்டு முகத்தில் சவரம் செய்ய ஆரம்பித்து விட்டார். அவர் கேட்டது போல் அங்குள்ள சர்வரும் அவரது ஆர்டரை கொண்டு வந்தார். ஆனால் அந்த கஸ்டமர்  சவரம் செய்வதைக் கண்டும் அதை நிறுத்த சொல்லவில்லை’ என்றார் கிம். சவரம் செய்து கொண்டிருந்த நபர் சர்வருக்கு நன்றியைக் கூறிவிட்டு மீண்டும் சவரம் செய்யத் தொடங்கியதாகக் கூறுகிறார்.

இந்த சவரக் காட்சி சுமார் 7 நிமிடம் நடைபெற்றது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் பற்றி எந்த சங்கோஜமும் இல்லாமல் நல்ல நிதானமாக இவ்வேலையில் ஈடுபட்டதாகவும். முடி கீழே விழுந்ததைக் கண்டு அருவருப்பான தான் அதைப் பற்றி அந்த நபரிடம் கேட்ட பொழுதும் அதற்காக பெரியதாகக் கண்டு கொள்ளவில்லை என்று அந்த செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

இதைப் படம்பிடித்த கிம்மின் காணொளியை அந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. வீடியோவைக் காண கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

https://stomp.straitstimes.com/singapore-seen/man-openly-shaves-face-at-kallang-wave-mall-cafe-it-was-disgusting





Leave a Reply

%d bloggers like this: